கன்னியாகுமரி: திருவட்டார் அருகே மணக்கா விளையைப் பகுதியைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத் மதிமுக கட்சி அதனைத் தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் முக்கிய பிரதிநிதியாக இருந்து அரசியல் பணியாற்றியவர். தமிழ்நாட்டில் மேடைப் பேச்சுகளில் ஒரு முன்னிலை பேச்சாளராக இருந்து வந்தார். பட்டிமன்றங்களாக இருந்தாலும் சரி, இலக்கிய மேடையாக இருந்தாலும் சரி, அரசியல் மேடையாக இருந்தால் சரி தன்னுடைய பேச்சாற்றலால் தமிழக மக்களை வசப்படுத்தியவர் நாஞ்சில் சம்பத்.
சென்னையிலிருந்து சொந்த ஊர் வந்த அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரது உறவினர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் அவரது மூளையில் ரத்தக் கசிவு காரணமாக வலிப்பு ஏற்பட்டு, ஞாபக மறதியும் ஏற்பட்டிருந்தது.