கன்னியாகுமரி: நாடு முழுவதும் அதிகரித்து வரும் கரோனாவைக் கட்டுப்படுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நோய் தடுப்பு நடவடிக்கையை அதிகரிக்கும் வகையில் பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கவும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும், தடுப்பூசி போடுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நாகர்கோவில் வாக்குச்சாவடிகளில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - கன்னியாகுமரி
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கிருமிநாசினி தெளித்து சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
NAGERCOIL POLLING BOOTH SANITIZING WORK
மேலும் தேர்தல் வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இதையும் படிங்க:நாகர்கோவிலில் தீயணைப்பு, உயிர் பாதுகாப்பு கருத்தரங்கு