தேர்தல் ஆணையம் சார்பில் நாடு முழுவதும் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும், நுாறு விழுக்காடு வாக்குப்பதிவு இலக்கினை அடைய வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நுாறு விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற மனித சங்கிலி! - collector prasanth vadanare
கன்னியாகுமரி: நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நுாறு விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாகர்கோவிலில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
nagarkovil
இந்நிலையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நாகர்கோவிலில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தலைமையில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கரை மாவட்ட ஆட்சியர் ஒட்டினார். மாணவ-மாணவிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாசகம் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தி நின்றனர்.
Last Updated : Apr 3, 2019, 2:43 PM IST