கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த நாகராஜா கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் பத்து நாள்கள் வெகு விமரிசையாகப் பெருந்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
இதனையடுத்து இந்தாண்டிற்கான விழா கொடியேற்றதுடன் இன்று தொடங்கியது. கோயில் தந்திரிகள் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து திருகொடியேற்றம் செய்தனர். தொடர்ந்து கோயிலில் உள்ள மூலவர் நாகராஜா சுவாமிக்கு சிறப்பு திருமுழுக்கு, பூஜைகள் நடத்தப்பட்டன.
கொடியேற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள வருகைதந்திருந்தனர். இக்கோயிலில் நடக்கும் பத்து நாள் விழாவில் ஒவ்வொரு நாளும் புஷ்ப வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், மண்டகப்படி, சிங்க வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெறவுள்ளன.
நாகராஜா கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது ஒன்பதாம் நாள் திருவிழாவான வரும் எட்டாம் தேதி தேரோட்டமும், ஒன்பதாம் தேதி சுவாமி ஆராட்டு நிகழ்ச்சியுடன் பத்து நாள்கள் திருவிழாவும் நிறைவுபெறும்.
இதையும் படிங்க :பாடங்களுடன் சேர்த்து காய்கறி வேளாண்மை பயிற்சி: அடடே முயற்சி!