குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நாகராஜா கோவிலில், தைத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் ஒன்பதாம் நாளன்று தேரோட்டம் நடைபெறும்.
கோவில் மூலஸ்தானத்தில் உள்ள நாகராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடந்த பின்னர் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. நாகருக்கு என மூலஸ்தானம் உள்ள சிறப்பு வாய்ந்த கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது.