கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஜமாஆத் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் இமாம் பாதுஷா, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சமய நிகழ்வுகள் நடைபெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 25ஆம் தேதி ரமலான் நோன்பு தொடங்கயிருப்பதால் பள்ளிவாசலிலே நோன்பு கஞ்சி காய்ச்சி அனைத்து வீடுகளுக்கும் வாகனங்களின் மூலம் விநியோகம் செய்ய அரசு அனுமதி வழங்கிட கோரிக்கைவிடுத்துள்ளதாக கூறினார்
மேலும், மாநிலம் முழுவதும் தராவிஹ் எனப்படும் சிறப்பு தொழுகைக்கு அனுமதி வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.