கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் எலக்ட்ரிக்கல் பிரிவில் தற்காலிகமாக பணிபுரிபவர்கள் வரதன் மற்றும் சதீஷ். இவர்கள் நேற்று (நவ-11) பேரூராட்சி அலுவலகத்திற்கு மது போதையில் வந்ததோடு அங்கு பணியில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்து பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த கன்னியாகுமரி காவல் துறையினர், தற்காலிக ஊழியர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு, அங்கிருந்து வெளியேறுமாறு கூறியதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கிய கூறப்படுகிறது. இதில் காவலர் கீழே விழுந்தார். இந்த வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.
போலீசாரை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கும் பேரூராட்சி ஊழியர்கள் இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பிற காவலர்கள் தற்காலிக ஊழியர்கள் இருவரையும் பிடித்து கன்னியாகுமரி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அரசு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்துதல், தாக்கி கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், பேரூராட்சி தற்காலிக ஊழியர்கள் இருவர் மது போதையில் காவலரை ஆபாச வார்த்தைகள் கூறியதோடு தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:வாடகை தகராறு ; தீவைக்க முயன்றவர் தீயில் எரிந்த பரிதாபம்