தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் - பாஜக எம்எல்ஏ எம்.ஆர். காந்தி - கல்யாணசுந்தரம் வீட்டில் பெட்ரோல் குண்டு

பல மாவட்டங்களில் பாஜக பிரமுகர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளிகளை உடனே கண்டு பிடிக்கவேண்டும் என நாகர்கோவில் தொகுதி பாஜக எம்எல்ஏ எம்.ஆர். காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Etv Bharatபெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் - எம்ஆர் காந்தி கோரிக்கை
Etv Bharatபெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் - எம்ஆர் காந்தி கோரிக்கை

By

Published : Sep 25, 2022, 4:22 PM IST

கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருகே பாஜக பிரமுகரும், அப்பகுதியின் பிரபல தொழிலதிபருமான கல்யாணசுந்தரம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் உடனே குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என நாகர்கோவில் தொகுதி பாஜக எம்எல்ஏ எம்.ஆர். காந்தி செய்தியாளரிடம் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்று நாட்களாகப் பெட்ரோல் குண்டுகள் வீடுகளில் வீசும் பழக்கம் உருவாகி இருக்கிறது. இதனை ஆரம்பத்திலேயே தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருகே கருமங்கூடல் பகுதியில் வசித்து வருபவர் பாஜக பிரமுகர் கல்யாணசுந்தரம், தொழிலதிபரான இவர் வீட்டில் இன்று(செப்-25) அதிகாலையில் அடையாளம் தெரியாத ஆசாமிகள் இரண்டு பேர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இந்த தாக்குதலில் இவரின் வீட்டு கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்துள்ளன. கார் மற்றும் இருச்சக்கர வாகனங்கள் எரிந்து சேதமாகின.

இச்சம்பவம் இந்தப் பகுதியில் மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் - பாஜக எம்எல்ஏ எம்.ஆர். காந்தி

பெட்ரோல் குண்டு வீசப்பட்டு பாதிக்கப்பட்ட கல்யாணசுந்தரத்தின் வீட்டிற்குச்சென்ற நாகர்கோவில் தொகுதி பாஜக எம்எல்ஏ எம்.ஆர். காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்று நாட்களாக வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசும் பழக்கம் உருவாகியுள்ளது. இதை ஆரம்பத்திலேயே அரசு கட்டுப்படுத்த முன் வரவேண்டும். இதில் யார் குற்றவாளிகள். யார் பின்புலமாக உள்ளார்கள் என்பதை தமிழ்நாடு அரசு உடனே கண்டுபிடித்து பெட்ரோல் குண்டு வீசும் முறையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க:குமரி தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ABOUT THE AUTHOR

...view details