குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெய்சிங் (47). இவர் சாமியார்மடம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அதிகாலையில் தனது இருசக்கர வாகனத்தில் மார்த்தாண்டத்திலிருந்து சாமியார்மடம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
அப்போது சாங்கை பகுதியில் சென்று கொண்டிருந்த போது இவரது வாகனத்தில் ஒரு லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்து ரோட்டில் கிடந்த ஜெய்சிங்கை அதுவழியாக வாகனங்களில் சென்ற நபர்கள் யாரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வேடிக்கை பார்த்து சென்றுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்தில் வந்த மார்த்தாண்டம் காவலர், ஜெய்சிங்கை மீட்டு குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி வழங்கிய பின் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிருக்கு போராடிய நபரை கண்டும் காணாமல் சென்ற வாகன ஓட்டிகள் அங்கு மருத்துவர்கள் இவரை பரிசோதனை செய்தபோது அவர் உயிரிழந்ததாக தெரியவந்தது. மேலும் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் இந்த விபத்து குறித்த காட்சிகளும், அதன்பின் அதுவழியாக செல்லும் வாகனங்களில் சென்ற நபர்கள் வேடிக்கை பார்த்து செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
இதையும் படிங்க: கோயிலுக்குள் பெண்ணுக்கு நடந்த கொடூரம் - இருவர் கைது