கன்னியாகுமரி: வெள்ளிசந்தை அருகே முட்டம் மீனவ கிராமத்தினைச் சார்ந்தவர் அன்றோ சகாயராஜ். இவரருக்கு மனைவி பவுலின் மேரி வயது (48) மற்றும் இரு மகன்கள் உள்ளனர். அன்றோ சகாயராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
ஒரு மகன் வெளிநாட்டில் தந்தை உடனும்; மற்றொரு மகன் சென்னையிலும் படித்து வருகிறார். பவுலின் மேரி அவரது தாய் தெரசம்மாளுடன் வசித்து வந்தார். நேற்று(ஜூன்06) அவர்களது உறவினர் பவுலின் மேரியின் செல்போன் எண்ணிற்கு அழைத்தபோது பதில் இல்லை. பல முறை முயற்சி செய்தும் செல்போனில் தொடர்பு கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டது.
இன்று(ஜூன்07) நேரடியாக வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு மின்சார இணைப்புப்பெட்டி உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு முன்பக்க கதவினை உடைத்துச்சென்று உறவினர்கள் பார்த்தபோது பவுலின் மேரி மற்றும் அவரது தாய் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.