தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோடி தொடங்கிவைத்த சாலையில் விரிசல் - மணல் கொள்ளையால் பாதிப்பு

நாகர்கோயில்: நரிக்குளம் அருகே தங்க நாற்கர சாலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலையின் அருகே மணல் அள்ளப்பட்டு வந்ததால், சாலையில் பெரும் விரிசல் ஏற்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மணல் அள்ளப்பட்டதால்; சாலை விரிசல் போக்குவரத்து பாதிப்பு!

By

Published : Jun 11, 2019, 7:58 AM IST

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தொடங்கி வைக்கப்பட்டு, இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் நான்கு வழிச் சாலை திட்டமாக, தங்க நாற்கர சாலைத் திட்டம் விளங்குகிறது. கன்னியாகுமரியில் நரிக்குளம் பகுதியில் சுமார் 22 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு நான்கு வழிச் சாலைகள் அமைக்கப்பட்டது. இதனை மூன்று மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சமூக விரோதிகள், சாலை அருகில் உள்ள குளத்திலிருந்த தண்ணீரை வெளியேற்றிவிட்டு, குளத்தில் 10 அடி ஆழத்திற்கும் அதிகமாக மண்ணை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதனால் சரியும் அபாயத்தில் இருந்து வந்த சாலையில், மழை பெய்ததால் பெரிய விரிசல் ஏற்பட்டு உடைந்துள்ளது. விரிசல் ஏற்பட்ட இடத்தில் தடுப்புகள் வைத்து, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மோடி தொடங்கிவைத்த சாலையில் விரிசல் - மணல் கொள்ளையால் பாதிப்பு

கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், நேரில் வந்து விரிசல் விழுந்த சாலையை ஆய்வு செய்தார். மேலும் பாலம் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details