கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமானதாக இல்லை என்று புகார்கள் வந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட நியாய விலைக்கடைகளுக்கு அரிசி சப்ளை செய்யும் கோணம் அரசு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் நேற்று (ஜூன் 28) ஆய்வு மேற்கொண்டனர்.
குறைகள் நிவர்த்தி
அப்போது சேமிப்புக் கிட்டங்கியில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அரிசி மற்றும் உணவுப் பொருள்களை பார்வையிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் தரமான உணவுப் பொருள்களை நியாய விலைக்கடைகளில் விநியோகிக்க வேண்டும் என்றும், கிட்டங்கியில் பூச்சிகள் வராதவண்ணம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் அலுவலர்களிடம் அறிவுறுத்தினர்.