கன்னியாக்குமரி மாவட்டம் அருமனை ஆறவிளை பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் கிங்ஸ், அவரின் சித்தி சுதா என்பவரை அவரது கணவர் வில்சன் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
காவல்நிலையத்தில் புகார் அளிப்பதற்கு முன் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமாரை, தொடர்பு கொண்டு பேசிய ராணுவவீரர் கிங்ஸை தகாத வார்த்தைகளால் உதவி ஆய்வாளர் பேசிய ஆடியோ வெளியானது.
இதுபற்றி காவல் உதவி ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜவான்ஸ் அமைப்பினர் வலியுறுத்தினர். இதையடுத்து உதவி ஆய்வாளர் சுரேஷ்குமாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஶ்ரீநாத் தெரிவித்திருந்தார்.