கன்னியாகுமரி:நாட்டில் விடுதலைக்கான 75ஆவது சுதந்திர தின அமுதப்பெருவிழா கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கோலாகலமாக கொண்டாடப்பட தயாராகி வருகின்றனர். அதன்தொடக்க நிகழ்ச்சிகளாக நாடு முழுவதும் வீடுகள்தோறும் தேசியகொடி ஏற்றுதல், ஊர்வலம் உள்ளிட்டப்பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் தேசத்தின் தென் முனையான கன்னியாகுமரி கடற்கரையில் இன்று (ஆக.11) ராணுவ வீரர்களின் தேசியக் கொடி அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. நாட்டில் விடுதலைக்கான 75ஆவது சுதந்திரதின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு, இந்திய ராணுவத்தின் 11ஆவது பட்டாலியன் திருவனந்தபுரம் பாங்கோடு ராணுவ மையம் சார்பில், தேசத்தின் தென்முனையான கன்னியாகுமரி கடற்கரையில் ராணுவ வீரர்களின் தேசியக்கொடி அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.
75 வீரர்கள் கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் பாங்கோடு ராணுவ மையம் வரை 75 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் ராணுவ வீரர்களின் நடைபயணம் தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் கேரளப் பாரம்பரிய சிலம்பாட்டம், களரி நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. விழாவில் ராணுவ உயர் அலுவலர்கள் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமியப் பிரமுகர்களுக்கு பரிசுகள் வழங்கி மும்மதத்திற்கும் பெருமை சேர்த்தனர்.
ராணுவ வீரர்களின் பயணம் தொடக்கம் கன்னியாகுமரியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அமைக்கப்பட்டு இருந்த 150 அடி உயரம் கொண்ட தேசியக் கொடி கம்பத்தைப்பராமரிக்கும் உரிமை திருவனந்தபுரம் பாங்கோடு ராணுவ நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க:தேசியக்கொடி ஏற்றும் உரிமையை இழந்து தவிக்கும் ஊராட்சித் தலைவர்கள்; ஆட்டிப்படைக்கும் ஆதிக்க வர்க்கம்!