தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவ குணம் கொண்ட இயற்கை தேனுக்கு அமோக வரவேற்பு - Honey available naturally in hilly areas

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கிடைக்கும் மருத்துவ குணம் கொண்ட தேன்களுக்கு நாடு முழுவதும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இயற்கையாகவே கிடைக்கும் மருத்துவ குணம் கொண்ட தேன்: அமோக வரவேற்பு!
இயற்கையாகவே கிடைக்கும் மருத்துவ குணம் கொண்ட தேன்: அமோக வரவேற்பு!

By

Published : Dec 30, 2022, 7:00 AM IST

மருத்துவ குணம் கொண்ட தேன்

கன்னியாகுமரி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கிடைக்கும் மருத்துவ குணம் கொண்ட தேன் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆங்காங்கே ரப்பர் தோட்டங்களிலும், தேன் பெட்டிகள் வைத்தும் தேன் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்து தேன்களும் மும்பை, ஹைதராபாத், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அதிக வரவேற்பை பெற்ற இந்த தேன் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் பயன்படுத்தலாம். இந்தத் தேனுக்கு எப்போதுமே ஒரு வரவேற்பு உள்ளது. மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் நாகர்கோவிலில் தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரியில் நேற்று (டிசம்பர் 29) தேன் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. தேன் சார்ந்த பொருட்கள் தேன் மெழுகு மூலம் செய்யப்படுகின்ற கைவினைப் பொருட்கள் முருங்கைத்தேன், அத்திதேன், நெல்லி பழதேன் என பலவகைகளில் தேன்கள் உற்பத்தி செய்யப்படுவது குறித்து இந்த பயிற்சி முகாமில் செயல் விளக்கம் கொடுக்கப்பட்டது.

தேன் பெட்டி, தேனை பிரித்து எடுக்கும் கருவிகள், தேன் எடுக்க செல்லும் போது முகத்தில் தேனீக்கள் கொட்டாமல் இருப்பதற்கு பாதுகாப்பு கருவிகள் உள்ளிட்ட உபகரணங்களும் இந்த கண்காட்சி இடம் பெற்றுள்ளது. இதனை ஏராளமான மாணவ, மாணவியர்களும், பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

இதையும் படிங்க: எட்டு வழிச்சாலை; மக்களுக்கு விருப்பமில்லை என்றால் புகுத்தமாட்டோம் - மத்திய அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details