தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகர்கோவில் காசிக்கு நாளை மருத்துவப் பரிசோதனை - exual complaints kasi

கன்னியாகுமரி: பல்வேறு பாலியல் புகார்கள், பண மோடி புகார்களுக்கு உள்ளாகியுள்ள காசிக்கு நாளை நாகர்கோவில் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட உள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

money-laundering-culprit-kasi
money-laundering-culprit-kasi

By

Published : May 25, 2020, 5:54 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த காசி என்பவர் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்களை சமூக வலைதளங்களில் தொடர்பு கொண்டு, காதலிப்பது போல் நடித்து அவர்களோடு தனிமையிலிருக்கும் படங்கள், வீடியோக்களை வைத்து அவர்களை மிரட்டிப் பணம் பறித்துள்ளார். அப்படி பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர், காசியைக் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதைத்தொடர்ந்து காசி மீது அடுக்கடுக்காக ஆறு புகார்கள் கொடுக்கப்பட்டன. அதில் கன்னியாகுமரியைச் சேர்ந்த 16 வயது சிறுமி கொடுத்தப் புகாரின் பேரில் காசி மீது குண்டர் வழக்கு பதியப்பட்டது. இதற்கிடையில் காவல் துறையினர் காசியை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கன்னியாகுமரி சிறுமி கொடுத்த புகார் தொடர்பாக நாளை காசிக்கு நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:பெண்களை ஏமாற்றிய காசி... ஐந்து நாள்கள் காவலில் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details