கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுகள் மற்றும் வாகனங்கள் எஃப்.சி. காட்டுவதிலும் லஞ்ச முறைகேடு நடந்துவருவதாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியினர்! - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி: ஓட்டுநர் உரிமம் வாகன பதிவுகளில் லஞ்ச முறைகேடு நடைபெறுவதாக கூறி இன்று (நவ. 17) மார்க்சிஸ்ட் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் லெனின் கம்யூனிஸ்ட் ரெட் ஸ்டார் கட்சியினர் கோழிப்போர்விளையில் இயங்கிவரும் மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பாக இன்று (நவ. 17) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது முறையாக ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும் என்றும், லஞ்சம் முறைகேடுகளைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
சிபிஐஎம்எல் கட்சி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சி.எம். பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.