குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், இன்று வீட்டருகே உள்ள தோப்பில் கட்டியிருந்த ஆட்டை அவிழ்த்துவரச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மாணவி வீட்டிற்கு திரும்பாததால், அவரது தாயார் அப்பகுதியில் அச்சிறுமியைத் தேடியுள்ளார்.
இந்நிலையில், சிறுமி அவரது பக்கத்து வீட்டிலிருந்து வெளியே வருவதைப் பார்த்த தாயார், அவரிடம் விசாரித்துள்ளார். அப்போது ஜான்சன் (45) என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஜான்சனை கைது செய்தனர்.