தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் ஆண் சடலம் மீட்பு! - நாகர்கோவில் அருகே தண்டவாளத்தில் சந்தேகத்திற்கிடமான ஆண் சடலம்

கன்னியாகுமரி: தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Suspected male corpse on a railway track near Nagercoil
Suspected male corpse on a railway track near Nagercoil

By

Published : Jan 19, 2020, 10:30 PM IST


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பள்ளிவிளைப் பகுதி ரயில் தண்டவாளத்தில் இன்று காலையில் தலை துண்டான நிலையில் ஆண் சடலம் காணப்பட்டது. இது குறித்து அப்பகுதியினர் நாகர்கோவில் ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பினர். பின்னர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர் கன்னியாகுமரி அருகே உள்ள பஞ்சலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி ஆறுமுகம் (50) என்பது தெரியவந்தது.

பள்ளிவிளை பகுதி தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

மேலும் சடலத்தின் அருகே மதுபாட்டில்களும் கண்டெடுக்கப்பட்டன. இது தற்கொலையா அல்லது கொலையா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:

புதிய பரப்புரையை தொடங்கவுள்ள நிதியமைச்சகம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details