தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரளாவைப்போல், தமிழ்நாடும் வானிலை ஆய்வு மைய அறிவிப்பை முன்கூட்டியே அறிவித்திருக்கலாம்- மீனவர்கள் கண்டனம் - வானிலை

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனும் இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பை, கேரளா முன் கூட்டியே அறிவித்தது போல தமிழ்நாடும் அறிவித்திருக்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவை போலவே தமிழ்நாடு அரசும்  வானிலை ஆய்வு மைய அறிவிப்பை முன்கூட்டியே அறிவித்திருக்கலாம்-
கேரளாவை போலவே தமிழ்நாடு அரசும் வானிலை ஆய்வு மைய அறிவிப்பை முன்கூட்டியே அறிவித்திருக்கலாம்-

By

Published : Aug 2, 2022, 11:11 AM IST

கன்னியாகுமரி: குமரி கடல், மன்னார் வளை கூடா, தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.

ஆனால், நேற்று முன்தினம் இரவு தான் தடைகாலம் முடிந்து மாவட்டம் முழுவதும் விசை படகுகளில் 6000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்களுக்கு இந்த எச்சரிக்கையை எப்படி கொண்டு செல்வது ? என மீனவ அமைப்புகள் கேள்வி எழுப்பி உள்ளன.

தமிழ்நாடு அரசு வானிலை ஆய்வு மைய அறிவிப்பை முன்கூட்டியே அறிவித்திருக்கலாம்- மீனவர்கள் கண்டனம்

இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பை கேரளா முன் கூட்டியே அறிவித்தது போல, தமிழ்நாடு வானிலை மையமும் அறிவித்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த கால தாமதமான நடவடிக்கைகளால் மிகப்பெரிய ஆபத்துகளை உயிரிழப்புகளை நாம் பலமுறை சந்தித்திருக்கிறோம். மீண்டும் தமிழ்நாடு அதே போன்று தவறுகளையே செய்து வருகிறது"என மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:ஆசனூரில் கனமழை - தேசிய நெடுஞ்சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details