கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் நீதிமன்றம் முன்பு சமூக நீதிக்கான வழக்கறிஞர் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணின் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சி.எம்.பால்ராஜ் தலைமையில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
வழக்கறிஞர்களின் கருத்து சுதந்திரம் பறிபோவதாக கூறி நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் - வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி: வழக்கறிஞர்களின் கருத்து சுதந்திரம் பறிபோவதாக கூறி சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இரணியல் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வழக்கறிஞர்கள் சங்கம்
மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
மேலும் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான வழக்கறிஞர்களின் கருத்து சுதந்திரம் அரசியல்வாதிகள், காவல்துறை என பல்வேறு வகைகளில் நசுக்கப்படுவதாகவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.