கன்னியாகுமரி:சர்வதேச சுற்றுலா இடங்களில் ஒன்றான கன்னியாகுமரிக்கு விடுமுறை நாட்கள் மட்டுமல்லாது, பண்டிகை காலங்கள் என அனைத்து நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இவ்வாறு வருபவர்கள் அதிகம் விரும்பிச்செல்லும் இடங்களான சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றிற்குச்செல்ல சுற்றுலா படகு சேவையானது, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கப்பட்டு வருகிறது.
நண்பகல் 12 மணிக்கு மேல் குமரியில் சுற்றுலா படகு சேவை ரத்து - tourist boat service canceled
குமரி பகவதி அம்மன் கோயிலின் நவராத்திரி விழாவில் நடைபெற உள்ள பரிவேட்டை நிகழ்ச்சியை முன்னிட்டு, சுற்றுலா படகுகளின் இயக்கம் நண்பகல் 12 மணிக்கு மேல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
நண்பகல் 12 மணி முதல் குமரி சுற்றுலா படகு சேவை ரத்து
இந்நிலையில் குமரி பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்று வரக்கூடிய நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா, இன்று (அக் 5) பிற்பகல் நடைபெறவுள்ளது. இதனால் இன்று நண்பகல் 12 மணிக்கு மேல் பிற்பகல் முழுவதும் சுற்றுலா படகுகளின் இயக்கம் ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:காலாண்டு விடுமுறை... குமரி கடலில் குவிந்த மக்கள்...