கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கத்தை விட வெப்பம் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
குமரியில் சுட்டெரிக்கும் வெப்பம்; மழை வேண்டி சிறப்பு வழிபாடு! - கன்னியாகுமரி
கன்னியாகுமரி: குகநாதீஸ்வரர் கோவிலில் கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கவும், மழை வேண்டியும் சிவனுக்கு 1008 இளநீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
குமரியில் சுட்டெரிக்கும் வெப்பம்; மழை வேண்டி சிறப்பு வழிபாடு!
இந்நிலையில், வெப்பத்தின் தாக்கம் குறைந்து, மழை வர வேண்டும் என்பதற்காக, குகநாதீஸ்வரர் கோவிலில் சிவனுக்கு 1008 இளநீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
குகநாதீஸ்வரர் கோவிலின் சிறப்புகள்:
- இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
- மாமன்னர் ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பு, இந்த கோவிலை மாதிரி வடிவமாக உருவாக்கியுள்ளார்.
- இந்த கோவிலில் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே மிக உயரமாக 5 1/2 உயரத்தில் உள்ள சிவலிங்கம் மூல ஸ்தலத்தில் உள்ளது.
-