தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரி அய்யா வைகுண்டசாமியின் தலைமை பதி ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமியின் தலைமை பதி ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குமரி அய்யா வைகுண்டசாமியின் தலைமை பதி ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
குமரி அய்யா வைகுண்டசாமியின் தலைமை பதி ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

By

Published : Aug 19, 2022, 10:33 AM IST

கன்னியாகுமரி: அய்யா வைகுண்டரின் தலைமை பதி குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை ஆகிய மூன்று மாதங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வகையில், இன்று ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் சிறப்பு பணிவிடைகளுக்கு பின்னர் கோயில் திருக்கொடியை கோயில் தலைமை, பாலா ஜனாதிபதி ஏற்றி வைத்தார். இந்த விழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவிலிருந்தும் அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

குமரி அய்யா வைகுண்டசாமியின் தலைமை பதி ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினசரி காலை மாலை பணிவிடை, மதியம் உச்சிப் படிப்பு, இரவு வாகனப் பவனி ஆகியவை நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான , அய்யா வைகுண்டசாமி வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி முந்திரி கிணற்றில் கலி வேட்டையாடும் சிறப்பு நிகழ்ச்சி வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருவிழாவை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்பிற்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இதையும் படிங்க:திருச்செந்தூர் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details