கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
2ஆண்டுகளில் 25 ஆயிரம் பொறியியல் பட்டதாரிக்கு வேலை- மநீம வேட்பாளர் உறுதி - Work for 25 thousand engineering graduates in 2 years
கன்னியாகுமரி: சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் இரண்டு ஆண்டுகளில் 25 ஆயிரம் பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவேன் என்ற உத்திரவாதத்தை 100 ரூபாய் பத்திரத்தில் எழுதி கையெழுத்திட்டு தருவதாக மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பி.டி. செல்வகுமார் உறுதியளித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மைய வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்ட பி.டி. செல்வகுமார் பேசுகையில், "கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினராக என்னைத் தேர்வு செய்தால் இரண்டு ஆண்டுகளில் 25 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலை வாய்ப்பை ஏற்படுத்தித்தருவேன். இதனை 100 ரூபாய் பத்திரத்தில் அஞ்சல் தலை ஒட்டி கையெழுத்திட்டுத் தருகிறேன். இந்த வேலைவாய்ப்பு உருவாக்குவதற்காக இப்போதே 10 பேர் கொண்ட கமிட்டியை உருவாக்கியுள்ளேன்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தினைச் சுற்றுலாத் துறையில் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என உத்திரவாதம் தருகிறேன்" என்றார்.