கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, தற்போது மூன்றாம் கட்டமாக மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். இந்நிலையில் சென்னை, கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் பணிபுரியும் கேரள மாநில மக்கள் தங்கள் குடும்பங்களுடன் சொந்த ஊர்களுக்கு அரசு வழங்கும் இ.பாஸை பயன்படுத்தி செல்லத் தொடங்கியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வழியாக செல்லும்போது பணியில் இருக்கும் அலுவலர்கள் இவர்களைத் தடுத்து நிறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தவிர்க்கும் விதமாக குமரி-கேரள எல்லையில் அமைந்துள்ள சோதனைச்சாவடி அருகே உதவி மையம் ஒன்றை திறக்க காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்தனர்.