தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடல் சீற்றத்தில் சிக்கிய மீனவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல் படை! - rescue fishermen

கேரளாவில் கடல் சீற்றத்தில் சிக்கி மாயமான மீனவர்களை, ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடல் சீற்றத்தில் சிக்கிய மீனவர்களை மீட்கும் பணியில் கேரள கப்பல் படைகள்!
கடல் சீற்றத்தில் சிக்கிய மீனவர்களை மீட்கும் பணியில் கேரள கப்பல் படைகள்!

By

Published : Aug 3, 2022, 6:42 AM IST

Updated : Aug 3, 2022, 12:34 PM IST

கன்னியாகுமரிமாவட்டம் முதல் கேரளா வரை உள்ள அரபிக் கடல் பகுதிகளில் பலத்த கடல் சீற்றமும் சூறாவளி காற்றும் வீசி வருகிறது. இதனால் விசைப்படகுகளிலும் வள்ளங்களிலும் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள், அரசின் அறிவிப்பு எச்சரிக்கை தெரிந்து கரை திரும்பும் போது கடல் சீற்றத்தில் சிக்கியதில் படகுகள் மூழ்கி விபத்துக்குள்ளாகி வருகின்றன.

இவ்வாறு விபத்துக்குள்ளான மீனவர்களை மீட்கும் விதமாக, கேரள அரசு கடலில் சிக்கியிருக்கும் மீனவர்களை கடலோர பாதுகாப்பு படைக்குச் சொந்தமான படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த கடல் சீற்றத்தில் சிக்கி படகு கவிழ்ந்ததில் ஆறு மீனவர்கள் மாயமாகியுள்ளனர். இவர்களில் நான்கு மீனவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள இருவரை கடலோர படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:கடல் சீற்றத்தில் சிக்கிய விசைப்படகு - வெளியான திக்திக் காட்சிகள்

Last Updated : Aug 3, 2022, 12:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details