தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல்துறையினர் காவடி ஏந்து செல்லும் பாரம்பரிய விழாவிற்குத்தடை; வெறுப்பில் மக்கள் போராட்டம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை காவல்துறை பாரம்பரியமாக காவடி கொண்டு செல்லும் நிகழ்ச்சிக்கு தடை விதித்ததால், காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharatகாவல்துறையினர் காவடி ஏந்து செல்லும் பாரம்பரிய விழாவிற்கு தடை - காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
Etv Bharatகாவல்துறையினர் காவடி ஏந்து செல்லும் பாரம்பரிய விழாவிற்கு தடை - காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

By

Published : Dec 9, 2022, 2:44 PM IST

கன்னியாகுமரி: தக்கலை காவல் துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் ஆண்டுதோறும் கார்த்திகையில் விரதமிருந்து குமாரக்கோயில் முருகன் கோயிலுக்கு காவடி ஏந்தி சென்று நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்நிகழ்சிக்கு திடீரென தடை விதித்ததால் அதிகாலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டம் செய்தனர்.

ஆண்டுதோறும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று தக்கலை காவல் நிலைய போலீசார், பொதுப்பணித்துறையினர் மற்றும் பொதுமக்களும் இணைந்து குமாரகோயிலுக்கு காவடி சுமந்து சென்று நேர்த்திக்கடன் செய்வது வழக்கம் ஆகும். இது திருவிதாங்கூர் சமஸ்தானமாக இருந்த காலம் தொட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான காவடி சுமக்கும் நிகழ்வுக்கு போலீசார், பொதுபணித்துறையினர், இவர்களுடன் பொதுமக்கள் இணைந்து கடந்த ஒரு வார காலமாக தயார்படுத்தி வந்தனர்.

இந்த ஆண்டின் கார்த்திகை கடைசி வெள்ளியான இன்று(டிச.9) தக்கலை காவல் நிலையத்திலிருந்து காவடி எடுத்துச்சென்று நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற இருந்தது. இதற்காக நேற்று(டிச.8) தக்கலை காவல் நிலையத்தில் பூஜைகளுக்கான முன்னேற்பாடுப் பணிகள் நடைபெற்று வந்தன.

காவல்துறையினர் காவடி ஏந்து செல்லும் பாரம்பரிய விழாவிற்கு தடை - காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பின்னர் அதிகாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் தக்கலை காவல் நிலையத்தில் இருந்து போலீசார் காவடி எடுத்துச்செல்லும் பாரம்பரிய நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து தடை விதித்துள்ளார். தகவல் அறிந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகாலை திடீரென காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாரம்பரிய காவடி கட்டு நிகழ்வுக்கு, அனுமதி வழங்க கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:ராகு தலமான திருநாகேஸ்வரத்தில் நாகநாதசுவாமிக்கு திருக்கல்யாணம்

ABOUT THE AUTHOR

...view details