தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சர்வதேச கராத்தே போட்டியில் பதக்கங்கள் வென்ற குமரி வீரர்! - Kanniyakumari player

கன்னியாகுமரி: மலேசியாவில் நடைபெற்ற 16ஆவது சர்வதேச ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வீரர் ஒருவர், இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.

karate-competition

By

Published : May 10, 2019, 10:49 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் கீழ மணக்குடி என்ற மீனவ கிராமத்தைச் சேர்ந்த அன்றோ செல்வகுமார் - ஜென்சி குயின் பிறேனா தம்பதியரின் மகன் ஆகாஷ். ஐந்தாம் வகுப்பு படித்து வரும் ஆகாஷ் சிறுவயது முதலே கராத்தேயில் அதிகம் ஆர்வம் கொண்டவர். இவர் தற்போது மலேசியாவில் நடைபெற்ற 16ஆவது சர்வதேச ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு, ஒரு தங்கம், ஒரு வெண்கல பதக்கங்களை வென்றார்.

சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற வீரர்

இதையடுத்து ஊருக்குத் திரும்பிய ஆகாஷிற்கு உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆகாஷ், "சர்வதேச அளவில் மலேசியாவில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கங்கள் வென்றது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு எனது தந்தை, தாயார் உறுதுணையாக இருந்தனர்.

நான் இந்த போட்டிகளில் கலந்துகொள்ள சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவானது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த எனது தந்தை எனக்காக இதனை செலவழித்தார். இதுபோன்று போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை நம் நாட்டிற்காக பெற ஆசையாக உள்ளது. அரசு இதற்கு உதவி செய்தால் இதுபோன்ற பெரிய போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற முடியும். எனவே, மத்திய, மாநில அரசுகள் எனக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும்", என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details