தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோழிக்கழிவை கொட்டிச் சென்ற லாரியை மடக்கிப் பிடித்த மக்கள்!

கன்னியாகுமரி: தனியார் தோட்டத்தில் கோழிக் கழிவை கொட்டிச் சென்ற லாரியை கிராம மக்கள் மடக்கிப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

கோழி கழிவு ஏற்றிவந்த லாரி

By

Published : May 4, 2019, 5:07 AM IST

கேரளத்திலிருந்து கோழி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள், தமிழக பகுதிகளில் அவ்வப்போது கொட்டிச் செல்வது நடந்து வருகிறது. முக்கிய தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள பகுதிகளில் அதிகமாக கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இவ்வாறு கொட்டி விட்டுச் செல்லும் குப்பைகளால் துர்நாற்றம், சுகாதாரக் கேடுகள் ஏற்படுகின்றன. இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், இராமனாதிச்சன்புதூர் பகுதியில் சந்தேகப்படும்படியான ஒரு கன்டெய்னர் லாரி நேற்று காலை வந்துள்ளது.

கோழிக் கழிவு ஏற்றிவந்த லாரி காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

அதிலிருந்து தாங்கமுடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி பொதுமக்கள் அந்த லாரியை மடக்கிப் பிடித்து, சோதனை செய்ததில் அதில் கோழி கழிவுகள் ஆங்காங்கே ஒட்டியிருந்ததை கண்டறிந்தனர்.

இதுகுறித்து, அந்த லாரி ஓட்டுநரிடம் விசாரித்தபோது, கேரளத்திலிருந்து கோழி கழிவை எடுத்து வந்து இந்த பகுதியிலுள்ள ஒரு தோப்பில் கொட்டிவிட்டு திரும்ப வந்ததாக தெரிவித்தார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த லாரியை மருங்கூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை கேரளத்திலிருந்து கொண்டுவந்து கொட்டுவது வாடிக்கையாகிவிட்டது. பலமுறை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தாலும், பெரியதாக நடவடிக்கை எடுக்கப்படாததால் இதுபோன்ற சம்பவம் தொடர்கிறது. இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அரசு அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.

தகவலறிந்த அஞ்சுகிராமம் காவல் துறையினர் பொதுமக்களை சமாதானம் செய்து, கோழி கழிவு ஏற்றிவந்த லாரியை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details