தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் அவதி ! - கன்னியாகுமரி

கன்னியாகுமரி : சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் அலங்கோலமாக கிடக்கும் படிக்கட்டுகளால் சுற்றுலா பயணிகள் அவதிப் பட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி சுற்றுலா பயணிகள் அவதி !

By

Published : May 20, 2019, 5:52 PM IST

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் நேரத்தை கழிக்க முக்கடல் சங்கமம் பகுதியை தேர்ந்தெடுக்கின்றனர். காசி, ராமேஸ்வரத்தையடுத்து, தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு முக்கடல் சங்கமத்தில் தான் மக்கள் அதிகம் கூடுகின்றனர். இந்த இடம் பல ஆண்டுகளுக்கு முன் பெரிய பாறாங்கற்களால் வடிவமைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு இறங்கி செல்லவும், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளூவர் சிலையின் அழகையும் ரசிக்கி இந்த படிகள் பயன்பட்டு வந்துள்ளது.

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் அவதி !
2004 ஆண்டு சுனாமி ஏற்பட்ட போது இந்த படிக்கட்டுகள் தூக்கி வீசப்பட்டது. சுற்றுலா தளத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய் செலவிடுகின்றன. ஆனால் முக்கிய சுற்றுலா தலமான இப்பகுதி பராமரிப்பும் இன்றி இருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அவதிப் பட்டு வருகின்றனர்.

வயதானவர்கள், சிறுவர்கள் இங்கு கடலில் கால் நினைக்க இறங்கிச் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் பெண்கள் கடலில் குளித்துவிட்டு படிக்கட்டில் ஏறும்போது தவறி விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, சுற்றுலாத் துறை இந்த பகுதியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details