அக்னி நட்சத்திர வெயில் தற்போது தமிழ்நாடு எங்கும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நீர்நிலைகள், குளங்களில் வெயிலின் தாக்கத்தினால் தண்ணீர் வற்றி விவசாய பயிர்களும் கருகும் நிலை உருவாகி உள்ளது.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் மழை வேண்டி யாகம்! - கன்னியாகுமரியில் உள்ள தாணுமாலயன் கோயில்
கன்னியாகுமரி: தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான கன்னியாகுமரியில் உள்ள தாணுமாலயன் கோயிலில் மழை வேண்டி யாகம் நடைபெற்றது.
இதனிடையே மழை பெய்வதற்கான சக்தி வாய்ந்த யாகமான வருண யாக பூஜைகளை தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது, அதன் படி பல்வேறு இடங்களில் வருண யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ள தாணுமாலயன் சுவாமி கோவிலில் தமிழக அரசு உத்தரவின் படி மழை வேண்டி வருண யாகம் நடத்தப்பட்டது. காயத்திரி மந்திரம் மற்றும் அமிருதவர்ஷினி இசை மேளங்கள் முழங்க நடைபெற்ற இந்த யாக பூஜையில் பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மழை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.