கன்னியாகுமரி ரயில் நிலையத்திலுள்ள டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் சூப்பர்வைசராக சுனில்(45) என்பவர் வேலை செய்து வருகிறார்.
இன்று காலையில் பயணிகளுக்கு வழங்கும் டிக்கெட் படிவங்கள் தீர்ந்து போனதால் அதை எடுப்பதற்காக. ரயில் நிலைய சேமிப்பு அறைக்கு அவர் சென்றுள்ளார். அங்கிருந்த பீரோவை திறந்துபோது, கையில் ஏதோ கடித்துவிட்டு பாம்பு போல் நெளிந்து சென்றுள்ளது. இதனால் அறைக்கு வெளியே வந்து, பாம்பு கடித்து விட்டதாக சுனில் கூறியுள்ளார். இதனால் சக ஊழியர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
கன்னியாகுமரியில் டிக்கெட்டி சூப்பர்வைசரைக் கடித்த எலி அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கடிவாயைப் பார்த்துவிட்டு, இது பாம்பு கடித்தது இல்லை; எலி கடித்த அடையாளம்தான் என்று கூறி சிகிச்சையளித்துவிட்டு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து ரயில் நிலையம் விரைந்த தீயணைப்பு வீரர்கள் ரயில் நிலைய சேமிப்பு அறையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து எலிகள் ஓடியுள்ளன.
ஆனால், கடித்ததாக கூறப்படும் பாம்பை காணவில்லை இதனால் ரயில்வே ஊழியரை கடித்தது பாம்பு இல்லை எலி என்று கூறிவிட்டு திரும்பிச் சென்றனர். இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.