கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பகுதியில் சுமார் பத்து ஏக்கர் பரப்பளவு கொண்ட செங்குளம் உள்ளது. இந்தக் குளத்து பாசனத்தை அடிப்படையாகக் கொண்டு இப்பகுதியில் சுமார் நூறு ஏக்கர் நெல், வாழை விவசாயம் நடைபெற்றுவருகிறது.
இந்தக் குளத்திற்கு நிலப்பாறை கால்வாய் மூலம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. மழைக்காலத்தில் குளத்திற்கு வரும் அதிக தண்ணீர் காரணமாக குளம் நிரம்பி தண்ணீர் வீணாவதுடன், வயல்வெளிகளில் குளத்து தண்ணீர் புகுந்து பயிர்களும் பாதிக்கப்பட்டுவந்தன.
எனவே வீணாகும் தண்ணீரை சேமிக்கவும், பயிர்களைப் பாதுகாக்கவும் நிலப்பாறை கால்வாய் குறுக்கே தடுப்பணை கட்ட கோரிக்கை வைக்கப்பட்டது. இதனடிப்படையில் கன்னியாகுமரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் தடுப்பணை கட்ட ஒதுக்கீடு செய்தார்.
இதனைத்தொடர்ந்து தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் இன்று நிலப்பாறை கால்வாய் தடுப்பணையை ஆஸ்டின் திறந்துவைத்தார். தடுப்பணை திறக்கப்பட்டதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நிலப்பாறை கால்வாயிலில் தடுப்பணை திறப்பு! மேலும் படிக்க: கால்வாய் கட்டும் விவகாரம்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்