தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேனா? - விஜய் வசந்த் விளக்கம்! - விஜய் வசந்த்

குமரி : கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.வசந்தகுமார், உயிரிழந்ததைத் தொடர்ந்து, தனது அப்பாவின் பணிகளைத் தொடரவுள்ளதாக அவரது மகனும், நடிகருமான விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

Kanyakumari constituency by-election? - Vijay Vasant Description
Kanyakumari constituency by-election? - Vijay Vasant Description

By

Published : Sep 4, 2020, 12:38 PM IST

Updated : Sep 4, 2020, 12:59 PM IST

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி காலமானார். அவரது உடல் அவருடைய சொந்த ஊரில் ஆகஸ்ட் 30ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. வசந்தகுமார் மறைவைத் தொடர்ந்து கன்னியாகுமாரி நாடாளுமன்றத் தொகுதி காலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, தற்போது காலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதியில், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட வேண்டும் என்ற குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக விஜய் வசந்த் எந்தவொரு பதிலும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், அகஸ்தீஸ்வரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”தந்தையின் இழப்பு பேரிழப்பு. அவர் விட்டுச் சென்ற பணிகளில் முதற்கட்டமாக வணிக நிறுவனங்கள், எங்கள் குடும்பம் ஆகியவற்றை கவனிக்க வேண்டி உள்ளது. அப்பாவின் மறைவுக்குப் பிறகு நண்பர்கள் பலர் நான் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

விஜய் வசந்த் செய்தியாளர் சந்திப்பு

நான் தற்போதும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மட்டும் தான். அதனால் மக்கள் சேவை செய்ய விரும்புகிறேன், ஆனால் தற்போதைக்கு தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:திருச்சியில் சோப்பில் மறைத்து கடத்த முயன்ற தங்கம் பறிமுதல்!

Last Updated : Sep 4, 2020, 12:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details