தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு மக்கள் பெரும்பாலும் ஆட்டோக்களை தான் பயன்படுத்துகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் குமரிக்கு அதிகபடியான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். எனவே அவர்கள் பாதுகாப்புடன் பயணிப்பதற்காக குமரி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு முகாம்! - போக்குவரத்து விதி
கன்னியாகுமரி: சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை வலியுறுத்தி சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
kஉமரி
அதில் கன்னியாகுமரி மாவட்ட டிஎஸ்பி பாஸ்கரன் கலந்துகொண்டு நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசுகையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். ஆட்டோ ஓட்டுகையில் விழிப்புணர்வுடனும், பொறுப்புடனும் போக்குவரத்து விதிகளை மதித்து செயல்பட வேண்டும் என ஆலோசனைகள் வழங்கினார். இந்த விழிப்புணர்வு முகாமில் கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து போலீஸார் கலந்துகொண்டனர். மேலும் இதில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.