தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ: குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்! - ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தொண்டர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

By

Published : Sep 13, 2019, 8:04 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே சீரோபாய்ண்ட் பகுதியில் மூன்று தலைமுறைகளாக வசித்து வந்த 47 குடும்பங்களை பேச்சிப்பாறை அணை விரிவாக்கப் பணிக்காக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதனைக் கண்டித்தும் அழகியபாண்டிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகளில் உள்ள குண்டு குழிகளை கண்டு கொள்ளாத சார் ஆட்சியர் சரண்யாவை கண்டித்தும் தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

அப்போது, தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை தக்கலை டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மனோ தங்கராஜ் எம்எல்ஏ உள்ளிட்ட போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details