கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கடும் மழையின் காரணமாக மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பொதுமக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாயின.
இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் கடற்கரைக் கிராமங்களான மணக்குடி, பள்ளம், அழிக்கால், பிள்ளைத்தோப்பு ஆகிய இடங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்டப் பகுதிகளைப் பார்வையிட்டார்.