கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மசாஜ் மையம், ஸ்பா என்ற பெயர்களில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்கு அதிகளவில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதனடிப்படையில், மசாஜ் மையங்களை ரகசியமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, நாகர்கோவில் கடற்கரை சாலை சந்திப்பில் பிளாக் பெர்ரி ராயல் ஸ்பா மசாஜ் என்ற மையத்தில், பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் ஜவஹர் தலைமையிலான காவல் துறையினர், அந்த மசாஜ் மையத்திற்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.