தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஜ பூஜை இல்லாமல் நடைபெற்ற ஆலமூடு இசக்கி அம்மன் கோயில் விழா! - forest department

கன்னியாகுமரி: முப்பந்தல் ஆலமூடு இசக்கி அம்மன் கோயில் ஆடி மாத பூக்குழி விழாவில் கஜ பூஜை ஊர்வலத்திற்கு யானைகளை பயன்படுத்த வனத் துறையினர் தடைவிதித்ததால் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

கோவில் விழாவிற்கு யானைகளை பயன்படுத்த வனத்துறை தடை!

By

Published : Jul 31, 2019, 8:17 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் நெல்லை மாவட்டத்திற்கும் இடையே அமைந்துள்ளது முப்பந்தல் ஆலமூடு இசக்கி அம்மன் கோயில். இந்தக் கோயில் இரு மாவட்ட மக்களுக்கும் எல்லைசாமியாக திகழ்ந்துவருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் மிக விமரிசையாக பூக்குழி கொடை விழா நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் சிறப்பு அம்சமாக நேற்று நள்ளிரவில் 13 யானைகளைக் கொண்டு இசக்கி அம்மனுக்கு கஜ பூஜை நடைபெறவிருந்தது. இதில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு, கேரள மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தார்கள்.

இந்நிலையில், கோயிலில் அம்மனுக்கு யானைகளை கொண்டு கஜ பூஜை நடத்துவதற்கு வனத் துறை திடீரென தடை விதித்தது. இதனால் கஜ பூஜை நிகழ்ச்சிக்காக வந்திருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். மேலும் இது தொடர்பாக வனத் துறை அலுவலர்களிடம் கோயில் சார்பில் கேட்டதற்கு அவர்களுக்கு இசைவான பதில் கிடைக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் வனத் துறையினரின் தடையை கண்டித்து நாகர்கோவில்-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.இதை காவல் துறையினர் தடுக்கவே மேலும் கொந்தளித்த பக்தர்கள் கோயில் வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகத்திற்கும் வனத் துறை அலுவலர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

கோயில் விழாவிற்கு யானைகளை பயன்படுத்த வனத்துறை தடை!

இதனால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மன வேதனையுடன் யானைகள் இல்லாமல் பால் குடம் எடுத்து ஊர்வலம் சென்றார்கள். இந்த ஊர்வலத்தில் வேல் காவடி, அலகு காவடி, தூக்கு காவடி உட்பட பல காவடிகளை எடுத்து பக்தர்கள் பக்த கோஷம் எழுப்பினர்.

இந்த ஊர்வலமானது ஆரல்வாய்மொழி கிருஷ்ணன் கோயிலில் தொடங்கி முப்பந்தல் ஆலமூடு இசக்கி அம்மன் கோயிலில் நிறைவடைந்தது.

ABOUT THE AUTHOR

...view details