தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காங். எம்பி, எம்எல்ஏக்கள் ஆட்சியரிடம் மனு! - ஈடிவி பாரத்

கன்னியாகுமரி: மத்திய அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடும் முடிவை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கன்னியாகுமரி: மத்திய அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடும் முடிவை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
கன்னியாகுமரி: மத்திய அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடும் முடிவை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

By

Published : Jun 4, 2021, 4:47 PM IST

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த், விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி, கிள்ளியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் ஆகியோர் இன்று (ஜூன் 4) காலை நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தடுப்பூசி விலையை ரத்து செய்க

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

"அனைத்து தரப்பு மக்களுக்கும் கரோனா இலவச தடுப்பூசி போடும் முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும். கரோனா தடுப்பூசியின் விலையை மத்திய அரசுக்கு 150 ரூபாய், மாநில அரசுக்கு 300 ரூபாய், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் என மூன்று விதமாக விலை நிர்ணயிப்பதை உடனடியாக ரத்து செய்யவேண்டும்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் காங். எம்பி, எம்எல்ஏக்கள் மனு

இந்தியா முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டு முடிய மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிடும். எனவே நாள்தோறும் ஒரு கோடி தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details