கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.
3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - காங். வேட்பாளர் வசந்தகுமார் - வாக்குகள் வித்தியாசத்தில்
கன்னியாகுமரி: மக்களவைத் தேர்தலில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என காங். வேட்பாளர் வசந்தகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை 8 மணி அளவில் அவரது வீட்டில் இருந்து புறப்பட்ட அவர் அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்பு அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் தனது வாக்கினைச் செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கடவுளின் அருளால் நான் வெற்றி பெறுவேன். நான் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோது இருந்த எழுச்சியை விட, தற்போது மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் கட்சியை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் என்று அவர் கூறினார்.