தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குறுக்கு வழிகளில் மாவட்டத்திற்குள் நுழைந்தால் சட்ட நடவடிக்கை

கன்னியாகுமரி: கரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் மாவட்டத்திற்குள் குறுக்கு வழிகளில் நுழைபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Kanniyakumari colloctor warn people who enter the district without epass
Kanniyakumari colloctor warn people who enter the district without epass

By

Published : Jun 18, 2020, 12:09 PM IST

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

குமரி மாவட்டத்தில் கடந்த 15ஆம் தேதி மதியம் சுமார் இரண்டு மணிக்கு அரசு அதிவிரைவு பேருந்தில் வந்த பயணிகளை பரிசோதனை செய்ததில் ஒரு நபருக்கு கரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி வந்து, பின்னர் அரசுப் பேருந்து மூலமாக நாகர்கோவில் வந்தது தெரியவந்தது.

இதனால் அவருடன் பேருந்தில் பயணம் செய்த 40 பேரும் பரிசோதனை செய்யப்பட்டு வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே, பேருந்தில் பயணம் செய்யும்போது மக்கள் அலட்சியமாக இல்லாமல் முறையாக தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவதோடு முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகக் கடைபிடிக்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகளில் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களின் ஆவணங்கள் தணிக்கை செய்யப்பட்டு, சளி மாதிரி பரிசோதனைகள் எடுக்கப்படுகின்றன. இந்த நடைமுறைகளைத் தவிர்க்கும் வகையில் ஒரு சிலர் குறுக்கு வழிகளில் மாவட்டத்திற்குள் நுழைய முயற்சிக்கின்றனர்.

இவ்வாறு குறுக்கு வழிகளில் நுழைபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வெளிமாவட்டங்களில் இருந்து யாரேனும் வருகை தந்துள்ளதாக தெரியவந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077 தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகவல் தருபவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details