தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் விபத்து - இருவர் உயிரிழப்பு! - கன்னியாகுமரி

கன்னியாகுமரி: தோவாளை பகுதியில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பொறியாளர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

kanniyakumari accident

By

Published : Oct 13, 2019, 5:28 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பொறியாளர் உள்ளிட்ட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நாகர்கோவில் பார்வதிபுரம் ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (25) இவர் பொறியியல் படித்து முடித்துவிட்டு வெளிநாடு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் விபத்து

இந்நிலையில், இன்று அதிகாலை தனது நண்பருடன் நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது தோவாளை ஆற்றுப்பாலம் அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மண்டை உடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details