தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஜிஎஸ்டி வரியில் எதிர்பார்த்த வசூல் இல்லை, சாலை பணிக்கான ரூபாய் மூடக்கம்' - ஜிஎஸ்டி வரி

கன்னியாகுமரி: மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரியில் எதிர்பார்த்த வசூல் கிடைக்காததால், தமிழ்நாட்டின் நான்கு வழிச்சாலை பணிக்கு வேண்டிய 54 ஆயிரம் கோடி ரூபாய் முடங்கியுள்ளதாக மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Vasanthakumar
Vasanthakumar

By

Published : Jan 19, 2020, 10:53 PM IST

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது போன்ற மோசமான அலுவலர்களை இதுவரை நான் பார்த்ததே இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் களியக்காவிளை முதல் காவல்கிணறு வரை உள்ள சாலையை சீரமைக்க 47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எந்தப் பணிகளும் நடைபெறவில்லை.

வசந்தகுமார் பேட்டி

இதேபோன்று தமிழ்நாட்டின் நான்கு வழிச்சாலை பணிக்காக 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்தத் தொகை மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளது. காரணம் ஜிஎஸ்டி வரி வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

மேலும், முத்ரா திட்டத்தின்கீழ் விஜய் மல்லையா போன்ற பல தொழிலதிபர்கள் பெற்ற 4 லட்சம் கோடி கடன் இதுவரை செலுத்தப்படவில்லை. இதனால் மத்திய அரசிடம் பணம் இல்லாததால் வங்கிகளில் மூலதனமாக இருக்கும் பத்திரங்களை மத்திய அரசு திருப்பிக் கேட்கிறது. இதனால்தான் இதுபோன்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details