கன்னியாகுமரி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்துவருகிறது. இதனால் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கிய போதிலும் வட இந்திய சுற்றுலாப் பயணிகளும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்த வண்ணம் இருந்தனர். இருப்பினும் கன்னியாகுமரி சுற்றுலாத் தலம் வெறிச்சோடிய நிலையில்தான் இருக்கிறது.
மழை காரணமாக வெறிச்சோடிய சர்வதேச சுற்றுலாத் தலம் - சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி : பரபரப்பாக காணப்படக்கூடிய கன்னியாகுமரி சுற்றுலாத் தலம் தொடர் மழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வரத்தின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
முக்கிய இடங்களான விவேகானந்தர், திருவள்ளுவர் சிலை, முக்கடல் சங்கமம், பகவதி அம்மன் கோயில், கடற்கரைச் சாலை போன்ற இடங்களில் இடைவிடாது பெய்துவரும் தொடர் மழையால் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள் வருகையை எதிர்பார்த்து அதிக முதலீடு செய்துள்ள வியாபாரிகள் தங்கள் வியாபாரத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்துவருவதால் சுற்றுலாப் பகுதிகள் மட்டும் அல்லாமல் அதைச் சார்ந்துள்ள சிறு வியாபாரிகளும் வியாபாரம் இல்லாமல் கவலையில் உள்ளனர்.