கன்னியாகுமரி:75 ஆவது சுதந்திர தினம் நேற்று(ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஒரு உணவகத்தில் சுதந்திரத்தை முன்னிட்டு 75 பைசாவுக்கு முதலில் வரும் 75 பேருக்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சுதந்திர தின கொண்டாட்டம் ...75 பைசாவிற்கு 75 பேருக்கு பிரியாணி ... - கன்னியாகுமரி
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் வடசேரி உணவகத்தில் 75 பைசா முதலில் கொண்டு வந்த 75 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
Etv Bharat75 பைசாவிற்கு 75 பேருக்கு பிரியாணி75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்
அந்த வகையில் 75 பைசா கொண்டு வந்த 75 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இதனை வாடிக்கையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மேலும் 25 உள்ளிட்ட பைசா புழக்கத்தில் இல்லாததால் பெரும்பாலானோர் தான் சேர்த்து வைத்த 25 பைசாவை உண்டியலை உடைத்து எடுத்துக் கொண்டு வந்து பிரியாணி வாங்கி சென்றனர். எனினும் பைசா கொண்டு வந்த பலர் பிரியாணி கிடைக்காமல் திரும்பிச் சென்றனர்.
இதையும் படிங்க:பாரம்பரிய கார் அணிவகுப்பு ஊர்வலம்...