தமிழ்நாடு அரசின் சார்பில் 64ஆவது தேசிய அளவிலான பள்ளி குழு விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆண்டு, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. இப்போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்ளது திறனை வெளிப்படுத்தினர்.
இதில் குமரி மாவட்ட பெண்கள் பிரிவில் ஸ்குவாஷ், வாள்சண்டை, சதுரங்கம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் ஐந்து மாணவிகளும், ஆண்கள் பிரிவில் குத்துச்சண்டை, வாள்சண்டை உள்ளிட்ட போட்டிகளில் ஏழு மாணவர்களும் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.
இதையடுத்து குமரி மாவட்டம் சார்பில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகையை வழங்கினார்.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மணவர்களுக்கு ஊக்கத்தொகை இது குறித்து வெற்றிபெற்ற மாணவி பிளஸ்ஸி கூறுகையில், "தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கிவருகிறது. மாணவர்கள் தங்கள் தனித்திறனை படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டுகள் மூலமும் வெளிக்கொண்டு வருவதன்மூலம் நல்லதொரு எதிர்காலத்தை அடைய முடியும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:சென்னையில் 'நிவர்' புயல் பாதிப்புகள் சரிசெய்யப்பட்டுவிட்டன - ஆணையர் பிரகாஷ்