தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தகுந்த இடைவெளி இல்லாமல் நடந்த காவல் உதவி ஆய்வாளர் திருமணம்: மண்டபத்துக்கு சீல் - இன்றைய கன்னியாகுமரி செய்திகள்

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் காவல் உதவி ஆய்வாளரின் திருமணம் நடைபெற்றதை அடுத்து, மண்டபத்துக்கு அலுவலர்கள் சீல் வைத்தனர்.

சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்த காவல் உதவி ஆய்வாளர் திருமணம்
சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்த காவல் உதவி ஆய்வாளர் திருமணம்

By

Published : Jun 11, 2020, 3:36 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மேல தர்மபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வலத்தி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவருகிறார். இவரது தந்தை சுயம்பு, ஓய்வுபெற்ற காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக இருந்தவர்.

இந்நிலையில் மணமக்கள் கார்த்திக் - சண்முகப்பிரியாவின் திருமணம் இன்று இருளப்பபுரம் மண்டபத்தில் நடந்தது. அந்த திருமண விழாவில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், கரோனா ஊரடங்கை மதிக்காமலும் திருமணம் நடைபெற்றது.

இது குறித்து அப்பகுதி மக்கள் நாகர்கோவில் ஆர்டிஓ அலுவலகத்துக்கும், கோட்டார் காவல் துறைக்கும் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள், கரோனா ஊரடங்கை மதிக்காமல் திருமணம் நடந்த மண்டபத்திற்கு சீல் வைத்தனர்.

சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல் துறையினரே அரசின் ஊரடங்கை மதிக்காமல் திருமணம் நடத்துவது வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க...போக்குவரத்துத் துறையை காயலாங்கடையாக மாற்றியவர் நேரு - அமைச்சர் செல்லூர் ராஜூ

ABOUT THE AUTHOR

...view details