தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாரம் தாக்கி 3 பசுமாடுகள் பரிதாப பலி! - பலத்த மழையில் மின்சாரம் தாக்கி பலி

கன்னியாகுமரி: பூதப்பாண்டி அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் மூன்று பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

In Kanyakumari, 3 cows dead in a current shock

By

Published : Sep 4, 2019, 10:21 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி, தோவாளை பூதப்பாண்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலையில் இருந்தே நல்ல மழை பெய்து வந்தது.

மின்சாரம் தாக்கி 3 பசுமாடுகள் பலி!

இந்நிலையில், பூதப்பாண்டி அருகே சீதப்பால் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் தனக்குச் சொந்தமான மாடுகளை அதே பகுதியில் உள்ள தென்னை தோப்பில் மேய்வதற்காக விட்டிருந்தார். அப்போது பலமாக காற்று அடித்ததில், தென்னை மரக்கிளை ஒன்று முறிந்து அவ்வழியாக சென்று கொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பி மீது விழுந்தது. இதில் மின் கம்பி அறுந்து தென்னை தோப்பில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி மூன்று பசு மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

ABOUT THE AUTHOR

...view details